‘ நடுநிசி மதியம் ’ - ரமேஷ் பிரேதனின் பதினான்காவது கவிதை நூல். மரபும் நவீனமும் கலந்த வாசிப்பின் இன்பம் பயக்கும் சந்தப் பாவியம். படிமம், உருவகம், குறியீடு யாவும் விருத்தக் கட்டமைப்பில் அமைந்து வாசிப்பின் திளைப்பையும் திகைப்பையும் ஒருங்கே வெளிப்படுத்தும் பின்நவீனப் பாப் பனுவல். ஆழ்ந்து அகன்ற நுண்ணிய மொழிதலில் கவித்துவத் திளைப்பை ( juissance poétique ) உண்டாக்கும் ஐம்புல உச்சாடனம். உறுப்புகளைக் கலைத்துக் கோர்த்து மாற்றிப் பொருத்தி; ஆண் + பெண் = ஆபெண் என முப்பாலை மாற்றி அடுக்கித் தொகுத்து; பொழுதுகள்தோறும் புதிது புதிதாய் உடம்புகள் வனையும் சொல்வினைக் குயவனின் புதிய வார்ப்புகள். நடுநிசி மதியம் ரமேஷ் பிரேதன் புதுஎழுத்து ஆசிரியரின் பிற கவிதை நூல்கள் 1. இருபது கவிதைகளும் இரண்டாயிரம் ஆண்டுகளும் 2. கறுப்பு வெள்ளைக் கவிதை 3. பேரழகிகளின் தேசம் 4. சக்கரவாளக் கோட்டம் 5. கொலை மற்றும் தற்கொலை பற்றி 6. உப்பு 7. நாவற்கொம்பு 8. அதீதனின் இதிகாசம் 9.