முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

இடுகைகள்

பிப்ரவரி, 2019 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

‘ரமேஷ் பிரேதனி’ன் -- ‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து _ லதா ராமகிருஷ்ணன்

‘ரமேஷ் பிரேதனி’ன் -- ‘காந்தியைக்கொன்றதுதவறுதான்’ என்ற கவிதையை முன்வைத்து _ லதா ராமகிருஷ்ணன் கவிஞர் ரமேஷ் பிரேதனின் இந்த நீள்கவிதையைப் படித்த தாக்கம் இன்னும் அகலவில்லை. உலக இலக்கியத்தின் எந்தவொரு முதல்தரமான, கவித்துவம் மிக்க அரசியல்கவிதையோடும் இணையாக நிற்கக்கூடிய காத்திரமான கவிதை இது. இந்த நீள்கவிதையின் ஒவ்வொரு பகுதியும் தனித்தனிக் கவிதைகளாக, தன்னிறைவு பெற்ற கவிதைகளாக வாசிக்கப்படத் தக்கவை; பொருள்தரத் தக்கவை. இந்தக் கவிதை அல்லது கவிதைகளில் அங்கிங்கெனாதபடி காந்தி என்ற வார்த்தை அல்லது பெயர் வருகிறது. ஆனால், இந்தக் கவிதை காந்தியைப் பற்றியதல்ல என்பதே ஒரு வாசகராக எனக்கு ஏற்படும் முதல் புரிதல். [மீண்டும் சொல்லத்தோன்றுகிறது – நான் இந்தக் கவிதை குறித்து முன்வைக்கும் கருத்துகள் கவிதை வாசிப்பில், அதுவும் ஒருசில வாசிப்புகளில் எனக்குக் கிடைத்தவை மட்டுமே. இந்தக் கவிதைக்கான உரையாக இதை நான் தர முன் வந்தால் என்னைவிட அறிவிலி யாரும் இருக்கமுடியாது] நான் காந்தியைக் கொன்றது தவறுதான் - அதுமட்டுமல்ல இயேசுவைக் கொன்றதும் சேகுவேராவைக் கொன்றதும் லுமூம்பாவைக் கொன்றதும் தவறுதான் - என்ன செய்வ